அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...விழிப்புணர்வு தகவல்!
தஞ்சாவூர் மாவட்டம். திருவையாறு தாலுக்கா.  கல்யாணபுரத்தை சேர்ந்த சங்கர் என்னும் நபர் சிங்கப்பூரில் 3வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார் இவர் கடந்தவாரம் சிங்கப்பூரிலிருந்து உண்டியல்  என்னும் ஹவாலா பண முதலைகளிடம் டாலர்களை அங்குள்ள ஏஜன்டுகளிடம் கொடுத்துவிட்டு அவரின் தாயாரிடம் 1லட்சம் தருமாறு கூறியுள்ளார் ..அவர்கள் இங்கு அரசால் அறிவிக்கபட்ட செல்லாத 1000மற்றும் 500ருபாய் பழைய பணத்தை *ஒரு லட்சத்தை*அவரின் தாயாரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.பிறகு அவரின் தாயார் அந்த பணத்தை வங்கில் செலுத்தும் போது *36000* ருபாய் கள்ளப்பணம் என தெரியவந்துள்ளது. வங்கி மேளாளர் காவல் துறை உதவி ஆனையருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் அது ஹவால பணம் என தெரியவந்ததால் உடனடியாக வருமானவரிதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தொடர் விசாரணையில் உள்ளார். அவருக்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்படி 7ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கபெறும். ஆகையால் வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர் இதுபோன்ற செயல்பாடுகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம் 
தற்போது துபாயில் 4000 திர்கம் கொடுத்தால் பழைய 500,1000 நோட்டு ஒரு இலட்சம் தருவதாக உண்டியல்  பணம் அனுப்பும் ஏஜெண்ட் ஆசை வார்த்தை கூறுவதாக தகவல். எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் Iqbal Ahmed

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-