அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் இந்திய துணை தூதரகத்தில் பாரதி பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது.
துபாய் இந்திய துணை தூதரகத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது. 

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியினை குளோபல் கனெக்ட் என்ற நிறுவனத்தில் ஏற்பாட்டில் நடக்கிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜோதி ஈஸ்வரன் கூறுகையில், "இந்த விழாவில் பாரதி திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ஞான ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். 

பாரதியார் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பாரதிகாவலர் டாக்டர் ராமமூர்த்தி கௌரவிக்கப்பட இருக்கிறார்.

மேலும் பாரதியின் பாடல்களை மையமாகக் கொண்ட கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதியார் தமிழ் இலக்கியத்துக்கும், 

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு செய்துள்ள பணிகள் இந்த விழாவில் நினைவு கூறப்படும்.
இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-