அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்: இந்தியன் சோஷியல் ஃபாரம், தமிழ்ப் பிரிவின்சார்பாக “தன்னார்வலர்கள்பயிலரங்கம்“23, டிசம்பர், 2016 அன்று குவைத்தில் நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தை இந்தியன் சோஷியல் ஃபாரத்தின் தமிழ்ப் பிரிவு தலைவர் சகோதரர் ஷகீல் அஹமது தலைமை தாங்கி இனிதே துவங்கி வைத்தார்.

இந்தியன் சோஷியல் ஃபாரத்தின் சிட்டி மண்டலசெயலாளர்சகோதரர் அப்துல்லாஹ் 
அவர்கள் வறவேற்புறை ஆற்றினார்.

தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபாரத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் சிக்கந்தர் பாஷா அவர்களால் “தன்னார்வலர்கள் பயிலரங்கம்” ஆரம்பமானது.

இதில் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளும், அவற்றை கையாள வேண்டிய முறைகளையும், முறையான, முழுமையான தீர்வுகளும் விளக்கப்பட்டன.

தொடர்ந்து தன்னார்வலர்களால் எழுப்பப் பட்ட பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கப் பட்டன.பின்னர்இமாம் ஜாகிர் உசேன் அவர்களால் “இறை வழியில்சமுதாயப் பணிகள் எவ்வாறிருக்க வேண்டும்” என்ற சிற்றுரை நடைபெற்றது. 

கலந்து கொண்ட ஏராளமான தன்னார்வலர்களுக்கு தேனீரும், சிற்றுண்டியும் சிறப்பான முறையில் பறிமாறப் பட்டது. இறுதியாக இந்தியன் சோஷியல் ஃபாரத்தின் தமிழ்ப்பிரிவுதலைவர்சகோதரர் 
ஷகீல் அஹமது அவர்களின் நன்றியுரையோடு பயிலரங்கம் நிறைவு பெற்றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-