அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழ்நாட்டில் அனுமதியற்ற முறையில் பள்ளிவாசல்களில் இயங்கி வரும் அனைத்து பள்ளிவாசல்களில் இயங்கும் ஷரீயா நீதிமன்றங்களையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

குவைத்தில் பணி புரியும் அப்துல் ரஹ்மான் (29) என்பவரை தலாக் செய்ய நிர்ப்பந்தித்த விவகாரத்தின் பின்னணியில் அவரால் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டு நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஷரீயா நீதிமன்றங்கள் எனும் பெயரில் அவ்வாறு எங்கும் இயங்குவதில்லையென பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, சென்னை, மக்கா மஸ்ஜிதில் இயங்கும் ஷரீயா கவுன்சிலில் ஏற்பட்ட பிணக்கே இதற்கான அடிப்படையென தெரிவித்துள்ளனர்.

ரஹ்மான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிராஜுடீன் தெரிவிக்கையில் மக்கா மஸ்ஜிதில் முஸ்லிம் சமூகத்தின் திருமண, விவாகரத்து தொடர்பிலான பிணக்குகளைக் கையாளும் குழுவால் தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கும்படி கோரி அணுகிய தனது கட்சிக்காரரருக்கு வலுக்கட்டாயமாக ‘தலாக்’ செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னணியிலேயே நீதிமன்றை நாடியதாக தெரிவித்துள்ளமையும் இவ்வாறு பள்ளிவாசல்களில் இயங்கும் குழு தாம் ஷரீயா அடிப்படையில் இயங்குவதாகத் தெரிவிப்பதனாலேயே அவை ஷரீயா நீதிமன்றங்கள் என அறியப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-