அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மறைந்த முன்னால் முதல்வர் அம்மா அவர்களுக்கு பிறகு யார்? என்கிற எண்ணம் தற்போது அந்த கட்சியினரை தாண்டி பொது மக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு பின்னால் யார் என்று தெரியாமல் போனதே இந்த விவாதத்திற்கு காரணம். சசிகலா வரவேண்டும் என்றும், தீபா வரவேண்டும் என்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகலா அவர்களை வழிநடத்த சொல்லி, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக என்பது இனிமேல் வளரக்கூடிய மரம் அல்ல. அது வளர்ந்து விட்ட ஆலமரம். வளர்ந்து விட்ட சாம்ராஜ்ஜியத்தை கட்டுக்கோப்பாக நடத்தி செல்ல ஆரம்ப கால உழைப்பாளிகளே கட்சியின் தலைவராக வர வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு, அபூபக்கர் (ரலி) ஆட்சி பொறுப்பை ஏற்கிறார். அவரது காலத்தில் இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்து, அரசின் பொருளாதாரம் உயர்ந்தது. இத்தகைய பொருளாதரத்தை சரியாக பேண, ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகம் தேவை என்பதாலேயே உமர் (ரலி) அவர்களை, அபூபக்கர் (ரலி) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
அவர் எண்ணியதை போன்றே உமர்(ரலி) அவர்கள், பொருளாதரத்தை சரியாக பயன்படுத்தி, சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். உமர்(ரலி) அவர்கள் இறக்கும் தருவாயில் இருந்த போது, அபுபக்கரை போன்று ஒரு தனி மனிதரை அவர் தேர்ந்தெடுக்க வில்லை. காரணம் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியில் செல்வம் நிறைந்தும், ஆட்சியின் எல்லை விரிந்தும் காணப்பட்டது.
இந்த நேரத்தில் ஒருவரை மட்டும் பரிந்துரைத்தால், "உமர் தனது இஷ்டப்படி தனக்கு வேண்டியவரை நியமித்து விட்டு சென்றுவிட்டார்" என்ற பேச்சு எழுந்துவிடும் என்பதை கருதி, நபி(ஸல்) அவர்களிடம் நெருங்கி பழகியவர்களில், முன்னணியில் இருந்த 6 சஹாபாக்களில் ஒருவர் ஆட்சி பொறுப்பை ஏற்கட்டும் என உமர்(ரலி) அவர்கள் தனது மரண தருவாயில் பரிந்துரை செய்தார்கள். அந்த குழுவில் தனது மகன் அப்துல்லாஹ் அவர்களை கண்காணிப்பாளராக மட்டும் சேர்த்து கொள்ள விரும்பினார்கள்.
அதன்படியே, அந்த 6 சஹாபாக்களும் கூடி ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்து, இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை ஆட்சியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அதை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். உமர்(ரலி) அவர்களின் சிறப்பான திட்டத்தால், எந்தவித குழப்பமும் இன்றி அடுத்த ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம், தற்போது அதிமுக விற்கு உதவிகரமாக இருக்கும். ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அதிமுக என்கிற கட்சியை நன்கு வளர்த்துவிட்டார். நல்லாட்சியும் புரிந்தார். அவருக்கு அடுத்து யார்? என்ற கேள்வி வரும்போது, உமர்(ரலி) அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களிடம் நெருங்கி பழகியவர்களில் முன்னணியில் இருந்தவர்களை பரிந்துரை செய்தார்களோ, அதே போன்று அதிமுக கட்சியில் ஜெயலலிதா அம்மையார் அவர்களிடம் நெருங்கி பழகியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது.
அந்த வகையில் அம்மா அவர்களிடம் நெருங்கி பழகிய ஓ.பி.எஸ், செங்கோட்டையன், மதுசூதனன் மற்றும் தம்பிதுரை போன்றோரும், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் வாதிகளான பண்ருட்டி ராமசந்திரன், அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் போன்ற அனைவருமே சசிகலா அவர்களை ஒருமித்தமாக தேர்ந்தெடுக்க விரும்பும்போது, அவர் வருவதே சிறந்தது.
ஆட்சியாளராக இருந்த உமர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லா அவர்கள், நிறைய பணிகளை செய்திருந்த போதும், தனது மகனின் பெயரை, அவர் பரிந்துரை செய்ய வில்லை. அதனால் கட்சிக்காக உழைக்காத தீபா அவர்களை இந்த போட்டிக்கே எடுத்துக்கொள்ள கூடாது.
எனவே அதிமுக வின் பொதுச்செயலாளராக சசிகலா அவர்களை தேர்ந்தெடுப்பதே அதிமுக கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக அமையும்.
நான் மேற்கூறிய எடுத்துக்காட்டு அதிமுக மட்டும்மல்ல, இந்தியா உட்பட, உலகில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடியது.
யாசிர்

மதுரை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-