அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஓமனில் சுற்றுலா வீஸாவை பயன்படுத்தி வர முயலும் சில நாடுகளைச் சேர்ந்த பெண்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் புதிய சட்டங்களை ஓமான் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஓமானுக்குள் நுழையும் போது நாடு திரும்புவதற்கான விமான டிக்கட் மற்றும் குறைந்தது 4 நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை பதிவு செய்த ரசீது இல்லையேல் விமான நிலையத்திலிருந்தே திருப்பியனுப்ப ஓமான் அரசின் புதிய சட்டம் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் விபசாரம், ஆட்கடத்தல் மற்றும் போதை பொருள் விற்பனை என்பவறை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஓமான் போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் குடியிருப்பு மற்றும் விடுதிகளுக்கு இந்த சட்டம் செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ள அந்நாட்டு போலிசார், புதிய சட்டத்தின் கீழ் சுற்றுலா வீசாவை பயன்படுத்தி தங்குவதற்கான காலம் குறைக்கப்பட்டு 10 தினங்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அது எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை மீறும் சுற்றுலா நபர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைய முடியாத வகையில் தடை செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் தொடக்கம் 3 வருடம் வரையான சிறைத்தண்டனையும் 20- 100 வரையான ஓமான் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு உதவுகிறவர் மற்றும் நடத்துகிறவர் அனைவருக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-