அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் அருகே பள்ளிகூடத்தில் பயின்ற மாணவனை பாம்பு தீட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தான்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் குமரேசன் (வயது 9). அந்த கிராமத்தல் உள்ள தொடக்கப் 4 ம் வகுப்பு பயின்று வந்தான். 

இந்நிலையில் இன்று, காலை 11.30 மணி இடைவேளையில் சிறுநீர் கழிக்க பள்ளியை விட்டு வெளியே வந்தான். 

அப்போது கழிப்பிடம் நோக்கி சென்று நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக பாம்பு ஒன்று கடித்தது. 

அதனால் அலறிய மாணவன் குமரேசனை சகமாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தன் பேரில் முதலுதவி செய்யப்பட்டு அருகே காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைககு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் போதிய மீட்பு மருந்துகள் இல்லாததால் தொடர்ந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதனால் இன்று கொளக்காநத்தம் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள்பெரும் சோகத்திற்கு உள்ளளாகி உள்ளனர். 

மேலும், அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-