அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 
 
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 2,800 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, மின் கட்டண மையங்களாகவும் செயல்படுகின்றன. அந்த மையங்களில், ரொக்க பணம், வங்கி காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அழைப்பு : 
மின் கட்டண மையம் தவிர்த்து, அரசு, 'இ - சேவை' மையம், தபால் நிலையம், சில வங்கிகள் மற்றும் மின் வாரிய இணையளத்திலும், மின் கட்டணத்தை செலுத்தலாம். மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டு, 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைக்கு மாற, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு வாயிலாக கட்டணம் வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

'பாயின்ட் ஆப் சேல்' : இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல வணிக நிறுவனங்கள், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை வைத்து, அதில், டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணப் பரிவர்த்தனை செய்கின்றன. 

அந்த முறையை, மின் கட்டண மையங்களில் செயல்படுத்த உள்ளோம். ஆனால், மற்ற நிறுவனங்கள் போல, மின் வாரியத்தால் உடனடியாக செயல்படுத்த முடியாது. இதற்காக, வங்கிகளிடம் பேசி, தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஜன., முதல், நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-