அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத் Kuwait டிச4.

     குவைத்தில் நேற்று அதிகாலை சுமார் 6.10 மணியளவில் கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தமிழகத்தின் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர்
பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
      இவருடைய தந்தை யூசுப், இறந்த அப்துல்லா இரண்டாவது மகன் அவார் வயது
28 ஆகும். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார்,காலையில் வேலைக்கு செல்லும் போது குவைத்தின் #அஹமதி  என்னும் இடத்தில் வைத்து  சிக்னலை கடக்க முயன்ற போது எதிரில் வந்த கனரக கிரேன் வண்டி பலமாக மோதியது. இதில் இவர் பயணம் செய்த கார் சுக்குநூறாக நெறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த  அப்துல்லா சம்பவ இடத்திலையே மரணமடைந்தார்.
   அப்துல்லா உடல் குவைத் பர்வானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் குவைத் சட்ட நடவடிக்கைகளை முடிந்த பிறகு. குவைதிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
Reporting by:Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-