அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகில் அதிகளவு பணம் வைத்து இருக்கும் சேர்ந்த ஏழு நாடுகளை சேர்ந்த பத்து நிறுவனங்கள் சவுதி அரேபியா, குவைத், கத்தார் , ஐக்கிய அரபு அமீரகம் , சிங்கப்பூர், சீனா நோர்வே ஆகிய ஏழு நாடுகளின் பத்து நிறுவனங்கள் வைத்து இருக்கும் பணத்தின் அளவு வின்வருமாறு காணப்படுகிறது.

01. அரசு ஓய்வூதிய நிதி நிறுவனம் – குளோபல்
தொகை : $ 882 பில்லியன்
நாடு : நார்வே
துவங்கப்பட்ட ஆண்டு : 1990
நார்வேயின் பெட்ரோலியத்துறையிலிருந்து வரும் உபரி இலாபத்தைப் பொது நிதியில் ஒன்று சேர்ப்பதற்காகத் துவங்கப்பட்ட நிறுவனமாகும். 

இது நார்வேயின் வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிறுவனம் 75 நாடுகளில் உள்ள 9,000 நிறுவனங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

02. அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி
தொகை : $ 773 பில்லியன்
நாடு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-அபுதாபி
துவங்கப்பட்ட ஆண்டு : 1976
இதற்குப் பெரும்பான்மை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.

03. சீன முதலீட்டுக் கழகம்
தொகை : $ 746.7 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 2007
இது சீன அரசின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கத் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2015 ல் உலகின் மிகப் பெரிய அந்நிய செலாவணி இருப்பாக $ 3.65 டிரில்லியன் என்ற அளவில் இருந்தது

04. SAMA ஃபாரின் ஹோல்டிங்ஸ்
தொகை : $668.6 பில்லியன்
நாடு : சவுதி அரேபியா
துவங்கப்பட்ட ஆண்டு : 1952
சவூதி அரேபியன் மானிட்டர் ஏஜென்சியால் 1952 ல் நிறுவப்பட்டு மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 சவூதியில் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பொது ஓய்வூதியங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.

05. குவைத் மூலதன அமைப்பு
தொகை : $592 பில்லியன்
நாடு : குவைத்
துவங்கப்பட்ட ஆண்டு : 1953
பல பெட்ரோலிய நிதிநிறுவனங்களைப்போல குவைத் மூலதன அமைப்பானது உபரி எண்ணெய் வருவாய் நிதிநிறுவனமாகும். 

இது மிகவும் பழமையானது. 1982லிருந்து அரசுசார்ந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் தன்னாட்சியாகச் செயல்படுகிறது.

06. SAFE முதலீட்டு நிறுவனம்
தொகை : $547 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 1997
SAFE முதலீட்டு நிறுவனமானது சீன நாட்டின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் துணை நிறுவனமாகும்

07. ஹாங்காங் நாணய ஆணையம் முதலீட்டுச்சேவை
தொகை : $417.9 பில்லியன்
நாடு : சீனா – ஹாங்காங்
துவங்கப்பட்ட ஆண்டு : 1993
இந்நிதியகமானது பணபரிவர்த்தன நிலையங்கள் மற்றும் வங்கி ஆணையாளரால் 1935ம் ஆண்டு நிறுவப்பட்டது.

08. கவர்மெண்ட் ஆஃப் சிங்கப்பூர் இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேசன்
தொகை : $344 பில்லியன்
நாடு : சிங்கப்பூர்
துவங்கப்பட்ட ஆண்டு : 1981
சிங்கப்பூர் அரசு மற்றும் நிதி ஆணையத்தின் பணத்தை நிர்வகிக்கும் பொருட்டு இது செயல்கபடுகிறது இந்நிறுவனமானது நாட்டின் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு துணைப்பிரதமரான Goh Kong Swee அவர்களால் நிறுவப்பட்டது.

09. கத்தார் முதலீட்டுக் குமுமம்
தொகை : $256 பில்லியன்
நாடு : கத்தார்
துவங்கப்பட்ட ஆண்டு : 2005
கத்தார் முதலீட்டு குழுமமானது சிறிய நாடுகளின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் உபரி வருமானத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. 

முதலில் எரிசக்தி துறையில் தொடங்கப்பட்டுப் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் விரிவாக்கப்பட்டது.

இதனுடைய பெரும்பாலான பங்குகள் பார்க்லேஸ், வோல்ஸ் வேகன் குரூப் மற்றும் போர்ச் நிறுவனங்களுக்குச் சொந்தமானது.

10. தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகம்
தொகை : $249.6 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 2000
தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகமானது சீனாவின் நான்கு அரசாங்க நிதியகத்தில் ஒன்றாகும்.

 இதன் முதன்மைப்பங்கானது நாட்டின் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய கவுன்சில் பாதுகாப்பு நிதியகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-