செபு பசிபிக் ஏர்லைன்ஸ்: இறப்பு
சிங்கப்பூரிலிருந்து பிலிப்பைன்ஸின் செபு நகரை நோக்கி சென்று கொண்டிருந்த செபு பசிபிக் ஏர்லைன்ஸின் 45 வயதுடைய துணை விமானி ஆஸ்டிரியா ஜூனியர் நடுவானில் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
துணை விமானி உயிரிழக்கும் போது 136 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்த விமானம் பத்திரமாக செபு மக்டான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மரணம் நீங்கள் எங்கிருந்தாலும் அடைந்தே தீரும், நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தாலும் சரியே (4:78) என்ற குர்ஆனிய வசன சுருக்கத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டுகின்றேன்.
எதிஹாத் ஏர்லைன்ஸ்: வேலை இழப்பு
அமீரகத்தின் 2வது பெரிய விமான நிறுவனமும் அபுதாபி அரசுக்கு சொந்தமானதுமான எதிஹாத் விமான நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
சுமார் 27,000 ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஈட்டிய நிகர லாபத்தில் 41 சதவிகிதம் சரிவு கண்டதாலும், பெட்ரோல் விலை வீழ்ச்சியாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது என்றாலும் எத்தனை பேர் வேலையிழக்க நேரிடும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
சுமார் 125 விமானங்களை கொண்டு சேவையாற்றி வரும் எதிஹாத் நிறுவனம் உலகளவில் பல விமான நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கியுள்ளது.
அதன்படி, அலிடாலியா நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகள், ஏர் பெர்லீன் நிறுவனத்தின் 29 சதவிகித பங்குகள், ஏர் ஷெஷல்ஸ் நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகள், விர்ஜின் ஆஸ்திரேலியாவின் 19.9 சதவிகித பங்குகள், ஐரிஸ் விமான நிறுவனமான ஏர் லிங்குஸின் 3 சதவிகித பங்குகள் மற்றும் நம் இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் 24 சதவிகித பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்: சிறப்பு கட்டண சலுகை அறிவிப்பு:
எமிரேட்ஸ் விமான நிறுவனம் 'ஹலோ 2017' என்ற சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் இங்கிலாந்தின் அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் துபைக்கும், துபை வழியாக பிற நாடுகளுக்கு செல்வதற்கான சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
இந்த கட்டண சலுகை ரிட்டர்ன் டிக்கெட்டுகளை 2016 டிசம்பர் 19 முதல் 2017 ஜனவரி 31க்குள் வாங்கினால்,
2017 ஜனவரி 16 முதல் 2017 டிசம்பர் 7 ஆம் தேதி வரையும்,
2017 ஜனவரி 13 முதல் 2017 டிசம்பர் 7 ஆம் தேதி வரையும்,
2017 பிப்ரவரி 7 முதல் 2017 ஜூன் 30 வரையும்
என மூன்று குறிப்பிட்ட சலுகை கால அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க் உள்ளே செல்லவும்.
https://www.emirates.com/uk/english/destinations_offers/special_offers/featured-fares/?intc_type=fares&intc_name=fares&intc_creative=link&intc_location=home
தகவலுக்காக:
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து துபை வழியாக சென்னை சென்று திரும்ப எமிரேட்ஸ் விமான கட்டணம் 329 (GBP) பவுண்டுகளே.
Sources: MSN
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.