தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. 2009ல் கார்டுகளுக்கான ஆயுள் முடிவடைந்த நிலையில் புதிய கார்டு வழங்கப்படவில்லை.
பழைய கார்டிலேயே உள்தாள் இணைக்கப்பட்டு, ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதால், ரேஷன் கார்டுகள் அனைத்தும் கிழிந்த நிலையில் உள்ளன.
2017ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், செல்போன் எண்களை இணைக்கும் பணி கடந்த செப்டம்பர் முதல் நடந்து வருகிறது.
ரேஷனில் வாங்கும் பொருட்களின் விபரம் குறித்து செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 80 சதவீதம் கார்டுதாரர்கள் தங்களது ஆதார் மற்றும் செல்போன் எண்களை ரேஷன் கார்டுகளில் இணைத்துள்ளனர்.
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைத்தவர்கள், இணைக்காதவர்கள், பாதி உறுப்பினர்களின் எண்களை இணைத்தவர்கள், என தனித்தனியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உள்தாள் இணைப்பு குறித்து, அரசிடம் இருந்து தகவல் வராத நிலையில், ஜனவரி முதல் ஆதார், செல்போன் எண்களை இணைத்தவர்கள்,
ஆதார் அட்டை அல்லது செல்போன்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆதார் எண்களை இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று, அதற்கான காரணம் என்ன அல்லது போலி கார்டா என்பது குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.