அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முதல்வர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு காலமானார். பின்னர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் உடல் வைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரை எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டன. 

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். மேலும் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் தமிழர்கள் மறைந்த முதல்வர் செயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இந்நிகழ்ச்சியில் சென்னை கிங்ஸ் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் கலிபோர்னியா மகாணம் மவுண்டைன் வியூ, சான் ஜோஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் உள்ள அதன் கிளை உணவகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-