அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தார்,டிச-22
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதல் மெட்ரோ ரயில் இயங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் நடைபெற்று வரும் தோஹா மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 44.8 சதவிகித பணிகள் நிறைவுற்றுள்ளன.

32 கி.மீ தூரத்திற்கு 35 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ள இந்தத் திட்டத்தின் ரெட் லைன் எனப்படும் 'லுசைல் முதல் வக்ராஹ்' (Lusail to Wakrah) வரையுள்ள நிலவடி (Under Ground Stretch) ரெயில் பாதை 13.6 கி.மீ தூரத்திற்கு நிறைவு பெற்றுள்ளன. மேலும் அதே ரெட் லைனில் உயர்த்தப்பட்ட (Elevated Route) பாதை 8.9 கி.மீ தூரத்திற்கும் நிறைவுற்றுள்ளன.

2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கால்பந்து போட்டியின் பிரதான ஸ்டேடியம் லுசைலில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சவுதியுடன் இணைக்கும் 486 கி.மீ நீள ரயில்வே திட்டமும் 2019 ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ளன.

Source: Gulf Times / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-