அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரபியா, டிச-27
2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதியான சுமார் 11 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரங்களில் சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானின் கொடுங்கோல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அலெப்போ நகரமே நரகமானது, இதனால் அலெப்போவில் வாழ்ந்த மக்கள் நிர்க்கதியாய் உணவின்றியும், உடையின்றியும், மருந்தின்றியும், தங்க இடமின்றியும் வெட்டவெளிகளில் கடும் குளிரில் பரிதவித்து வருகின்றனர்.

அநியாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு உணவு, மருந்து, உடைகள், தற்காலிக தங்குமிடம் மற்றும் குளிருக்கு தேவையான பொருட்களை வழங்கும் பொருட்டு சவுதி மன்னர் சல்மான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசு சார்பாக 100 மில்லியன் ரியால்களை விடுவித்ததுடன் நாடு தழுவிய அளவில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் திட்டமும் (Kingdom wide fund raising campaign) துவங்கப்பட்டுள்ளது.

மேலும், சவுதி மன்னர் சல்மான் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பாக 20 மில்லியன் ரியால்களும், முதலாம் பட்டத்து இளவரசர் (Crown Prince) முஹமது பின் நாயிஃப் அவர்கள் சார்பாக 10 மில்லியன் ரியால்களும், இரண்டாம் பட்டத்து இளவரசர் (Deputy Crown Prince) முஹமது பின் சல்மான் அவர்கள் சார்பாக 8 மில்லியன் ரியால்களும் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஜோர்டான், துருக்கி, லெபனான் மற்றும் சிரியாவின் உட்பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கான உதவிகளும் வழமைபோல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-