அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஊட்டி கொடைக்கானால் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் விளைக்கூடிய காய்கறிகளை வறட்சி மாவட்டமும் நிலப்பரப்பான கருமண்ணில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து விளைவிக்க முயற்சி செய்து வெற்றி கண்டு வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகாளக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் நல்ல வரவேற்பு உள்ள ஆங்கில காய்கறிகளை பயிரிட ஆர்வம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 பருத்திஈ மக்காச் சோளம், கம்பு, சோளம், உள்ளிட்ட பயிர்கள் விளைந்த பகுதிகளில் இந்த ஆண்டும், காலி பி ள வர், முட் டை கோஸ் ஆங்கில காய்கறிகளை பசு மைக்குடிலில் அனுக்கூர் விவசாயி ஒருவர் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

உழவர் சந்தையில் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வரவேற்பு உள்ளதால் உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் விவசாயி ராமச்சந்திரன்.

 கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் ஐடிஐ வெல்டர் படிப்பையும் அங்கேயே படித்துள்ளார். 

சொந்த ஊருக்கு திரும்பிய அவர், நிலத் தில் இயற்கை முறை நெல் சாகுபடியில் ஈடுபட்ட இவர் தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தோட்டக் கலைத்துறை உத வி யு டன், பசுமைக் குடில் அமைத்து பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்து வருகிறார்.

இதற்காக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட் டம் 2015-2016 ன்கீழ் விண்ணப்பித்த ராமச்சந்திரனுக்கு தோட்டக் கலைத் துறை சார்பாக பசுமைக் குடில் அமைக்க ரூ 9.75 லட் சம், கடனுதவி வழங்கி அதில் ரூ4,67,500 மானியமாகவும், வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 250 சென்ட் பரப்பளவில், பசுமைக் குடில் அமைத்த ராமச்சந்திரன், அதில் ஆங் கில காய்கறிகளான காலிபிளவர், முட்டைக் கோஸ், நூல்கோல், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். 

நான்கு மாதப் பயிரான காலிபிளவரை ஒரு மாதப்பயிராக ஒசூரில் இருந்து வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். ஒவ்வொரு செடியிலும் ஒரு கிலோ எடை அளவுள்ள காலிபிளவர் பூத்துள்ளது.

இவற்றை அருகே உள்ள பெரம்பலூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். தற்போது அறுவடை செய்து வரும் ராமச் சந் தி ரன் ரூ.25முதல் ரூ.40வரை விலை வைத்து விற்பனை செய்து வருகி றார். 

அதோடு முட்டைக் கோஸ், பீன்ஸ், நூல்கோல், பஜ்ஜி மிளகாய், கொடி தக்காளி ஆகி ய வற் றை யும் பசுமைக் குடிலுக்குள் சாகுபடி செய்து வருகிறார்.

இவருக்கு இணையாக ஐடிஐ முடித்துள்ள இவரது தம்பி ராஜேந்திரன்(32) பசுமைக் குடில் அமைத்து தக்காளி, உயர் ரக பச்சை மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவர்களுக்கு வேப்பந்தட்டை வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் (பொ) நல்லமுத்து என்பவர் வயலுக்கே நேரில் வந்து ஆலோசனைகளைத் தெரிவிப்பதாக கூறினார்.

12 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து ஆங்கில காய்கறி வகையான பீட்ரூட், காரட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து பயிரிட்டு முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர். 

இவரை போன்று கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூரில் ஓர் விவசாயி காலிபிளவரையும், எசனை கிராமத்தில், கோடைக் காலத்திலேயே எவ்வித குடிலும், அமைக்காமல் பீட்ருட், காரட் முட்டைகோஸ் பயிரிட்டார். 

அவர்களுக்கு போதுமான விதைகள், மற்றும் காய்கறிகள் சாகுபடி குறித்த போதிய விவரங்கள் இல்லாத காரணத்தால் பயிரிடுவது தொய்வில் முடித்து கொண்டனர் என்பது வருத்தமான செய்தி. 

இது போன்று விவசாயிகள் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய காய்கறிகளை பயிரிடுவதால் மிக குறைந்த விலையில் தரமானதாக புதிதாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-