அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குன்னம்,

குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அ.தி.மு.க. உறுப்பினர். இவரது மனைவி கலா. இவர்களுடைய மகன் கருப்பையா (வயது 17). இவர் அரியலூர் மாவட்டம் குழுமூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜெயலலிதா மறைவையொட்டி சின்ன வெண்மணி கிராமத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பாஸ்கர் தனது மகன் கருப்பையாவுடன் கலந்து கொண்டார். அப்போது சின்ன வெண்மணி பஸ் நிலையம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே கருப்பையா தண்ணீர் குடிப்பதற்காக கொத்தவாசல் சாலையில் உள்ள குடிநீர் மோட்டார் அறைக்கு சென்றார். அங்கு எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கருப்பையா உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-