அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத், டிச-10நேர்மையாளர்கள் இன்னும் உலகிலிருந்து அற்றுப்போகவில்லை என்பதை அடிக்கடி பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன, அப்படியொரு சம்பவம் குவைத்திலும் நடந்துள்ளது.

குவைத்தில் செயல்படும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜூதா ஜமால் அப்துஸ் ஸலாம் என்ற வெளிநாட்டவர், யாரோ ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற ஒரு பையை கண்டெடுக்கின்றார் அதில் 6,600 குவைத் தினாரும் 3,000 அமெரிக்க டாலரும் இருந்துள்ளது. இது அவர் பெற்று வந்த மாதாந்திர சம்பளமான 100 தினாரை விட 75 மடங்கு கூடுதலானது.

சிறிது நேரம் பணத்தை தவறவிட்டவருக்காக காத்திருந்தவர் யாரும் வராததால் உடனடியாக தனது ரியல் எஸ்டேட் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சுமார் 2 மணி நேரம் கழித்து பணத்தை தவறவிட்டவர் தேடிவந்து பெற்றுச் சென்றார்.

ஜூதா ஜமால் பணத்தை தனது அலுவலகத்தில் ஒப்படைக்கும் போது அவரது மேலதிகாரி, நீ பணத்தை எடுக்கும் போது யாரும் பார்க்கவில்லையா? ஏன வினவ, 'நிச்சயமாக என்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்' என பதிலளிக்க, அவரது பதிலாலும் நேர்மையாலும் ஈர்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சி மூலம் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-