அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த கடிதத்தில், அலோப்பாவில் ராணுவ வீரர்கள் என்ற போர்வையில் இருக்கும் மனித மிருகங்களிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சிக்கி சீரழிய நேரிடலாம். 

என்னை காப்பாற்ற எந்த ஆண்மகனோ அல்லது ஆயுதமோ தற்போது இல்லை.
நான் யாரையும் கெஞ்ச போவதில்லை. நான் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்து கொள்ள போகிறேன்.

நான் இங்குள்ளவர்களால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு என் தந்தை முன்னர் போக விரும்ப வில்லை அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

காரணம் இல்லாமல் இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இங்கு தற்போது இருக்கும் பேராபத்தை நினைவில் கொண்டே இதை செய்ய போகிறேன்.

இங்கு இருக்கும் மனித மிருகங்கள் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்து என்னை துன்புறுத்துவார்கள். காரணம் நான் யாரோ ஒரு பெண் தானே. அவர்களின் தாயோ, சகோதரியோ, மனைவியோ இல்லையே!

இதை யாராவது படிக்கும் முன்னர் என் உயிர் பிரிந்திருக்கும். இவ்வாறு அந்த பெண் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-