அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இஸ்லாம் மதத்தில் ஆண்கள் தங்களை மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' என்று கூறும் நடைமுறையை வட இந்தியாவில் நீதிமன்றம் ஒன்று அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.

இந்த நடைமுறையானது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை மீறுவதாக அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் இதே நடைமுறையை எதிர்த்து வழக்கு ஒன்று நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை காரணமாக பெண்கள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்படலாம் என்று விமரசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் திருமணங்கள் தனிப்பட்ட இஸ்லாமிய தனிச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த விவாதங்கள் நியாயமற்ற வகையில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருவதாக 'தலாக்' நடைமுறையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-