அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னையை சேர்ந்தவர் சத்திய நாராயணன்ரெட்டி (வயது 68). அவரது மனைவி வசந்தா (64). துபாயில் நடைபெறும் ரோட்டரி சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இருவரும் ஒரு வார கால சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்றனர்.

அவர்கள் துபாயில் உள்ள ‘கிராண்ட் ஹயாத்’ என்ற வணிக வளாகத்திற்கு சென்றனர். அப்போது வசந்தாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியநாராயணன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் வசந்தாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். துபாய்க்கு சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று சத்தியநாராயணன் கவலை அடைந்தார்.

இதுகுறித்து சத்தியநாராயணன் கூறுகையில், ‘வணிகவளாகத்தில் உள்ள கடைகளை மகிழ்ச்சியாக இருவரும் சுற்றிப்பார்த்தோம். எனது மனைவி மகிழ்ச்சியாக இருந்தாள். 

அங்கிருந்த கார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டோம். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாள். 

எங்களது 39 வருட தாம்பத்ய வாழ்க்கையில் இதுவே முதல் வெளிநாட்டு பயணம். மனைவியுடன் மகிழ்ச்சியாக வந்த நான், தற்போது சென்னைக்கு இறந்த அவளின் உடலுடன் செல்கிறேன்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-