அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-10துபையில் செயல்படும் இந்திய துணை தூதரகத்தின் கன்சுலர் ஜெனரலாக 2013 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் அனுராக் பூஷன் அவர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைவதையொட்டி புதிய கன்சுலர் ஜெனரலாக 'விபுல்' (Vipul) அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் பதவியேற்கக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விபுல் அவர்கள் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அலுவலகத்தில் இணைச் செயலாளராக (Joint Secretary) பணியாற்றிவருகிறார்.

கடந்த திங்கட்கிழமை அன்று தான் அமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக ஆஸ்திரேலியாவில் இந்திய ஹை கமிஷனராக பணியாற்றி வந்த நவ்தீப் சிங் சூரி அவர்கள் அபுதாபியில் பொறுப்பேற்றார். சூரிக்கு முன் தூதராக பணியாற்றிய T.P. சீதாராமன் அவர்கள் கடந்த ஆகஸ்டிலேயே பணி ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.


Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-