அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியா, டிச-26
சவுதியிலிருந்து தங்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்ப சுமார் 2 முதல் 6 சதவிகிதம் வரை வருமான வரி விதிக்க பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள என்றாலும் இது உடனடியாக அமுலுக்கு வராது என நிதிக்கமிட்டியின் பொதுச் செயலாளர் முஹமது அல் துவைஜிரி தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு காலத்தில் வெளிநாட்டினர் வருடத்திற்கு 57 பில்லியன் ரியால்களை சவுதியிலிரந்து அனுப்பி வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு இது 135 பில்லியன் என மும்மடங்காக உயர்ந்துள்ளது. 


உலக வங்கியின் அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்து சவுதியிலிருந்து சுமார் 37 பில்லியன் டாலருக்கு நிகரான ரியால்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.

அதேவேளை, வருமான வரி நடைமுறைக்கு வரும்போது போரினாலும், அரசியல் மற்றும் சமூக குழப்பங்களாலும் பாதிக்கப்பட்ட நாடுகளான ஏமன், பர்மா, சிரியா போன்ற தேசத்தவர்களுக்கு விலக்களிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-