அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஆறுநாடுகளை அற்புதமாய் அணிவகுக்கும் இணையில்லா இபன்பட்டுட்டா பேரங்காடி!

பாய்மரக்கப்பல் போன்று பார்வை பறிக்கும் புர்ஜ் அல் அராப்!

ஐரோப்பிய கட்டமைப்புடன் மிளிரவைக்கும் மெர்க்கடோ பேரங்காடி!

பாயும் வேகமும்,பாவையரின் நடனமும் பிரமிக்க வைக்கும் பாலைவன உலா!

கடல்பனைமரத்தின் நடுவே அட்டகாசமாக அமர்ந்திருக்கும் அட்லான்டிஸ்!

பிரம்மாண்டத்தின் உச்சத்தை
பிரதிபலிக்கும் புர்ஜ்கலிஃபா!

துள்ளும் மீன்களை தன்னுள்கொண்டு தரணியையே
திகைக்கவைக்கும்
துபாய்பேரங்காடி!

பாலைவனச்சோலையில் சிலிர்ப்புடன் சிறகடிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்கா!

அன்டார்டிக்காவை அகத்திலே கொண்ட அமீரகபேரங்காடி!

ஓங்கிலும் நீர்நாயும் ஒய்யாரமான நடனத்துடன் பலவண்ணப்பறவைகளுடன் பறக்க வைக்கும்!

எகிப்தியர்களின் எழில்மிகுகலையை எடுத்துக்காட்டும் வாஃபி பேரங்காடி!

உலகம் உள்ளங்கையிலென உணர்த்தும் உற்சாககிராமம்!

கண்கவர் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் அருங்காட்சியம்!

தூரதேசமென்றபோதிலும் தோழனாய் தினதந்தியும்,சலாம் பண்பலையும்!

அந்நியதேசமாயினும் அனைவரையும் அரவணைக்கும் அமீரகம்!

– அபிநயா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-