அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் பயிலும் தமிழக சிறுவனின் அபார திறமை சற்று முன் செய்த செயலை மறந்து விடும் சூழ்நிலைக்கு ஆளாகும் இக்காலத்தில் பல்வேறு கட்டங்களில் தனது ஞாபக சக்தியை நிரூபித்து அனைவரையும் ஆச்சரியத்தில் முழ்கடிக்கிறார் சிறுவன்எஸ் முஹம்மது ஃபஹீம் 5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார். 

கீழக்கரை வடக்குதெருவை சேர்ந்தவர் சாஹுல் ஹமீது இவரது மனைவி சமீமா பர்வீன்.சாஹுல் ஹமீது துபாயில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தோடு துபாயில் வசிக்கின்றனர் இந்த தம்பதியினரின் மூத்த மகன் பஹீம் இவர் துபாய் தனியார் பள்ளியில் 6வது வகுப்பு படித்து வருகிறார் இவர் சிறு வயதிலிருந்து அபார ஞாபக சக்தி உடையவராக திகழ்கிறார். 

இவரது அபார திறமையை துபாய் பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது. அவரது தந்தையார் சாஹுல் ஹமீது கூறியதாவது… இறைவன் அருளால் என் மகன் இத்திறமை படைத்து விளங்குகிறார். எனது மகன் போன்று எண்ணற்ற சிறுவர்கள் திறமைபடைத்தவர்களாக விளங்குகின்றனர்.

இவர்களது திறமை வெளி கொண்டு வர வேண்டியது பெற்றோர்களின் கடைமை எனது மகனை பாராட்டிய அனைவருக்கு நன்றி. எனது மனைவி ஷமீமாவும் எனது இளைய மகன் ஹமீது ஜாசிம் ஆகியோர் எனது மகனின் சாதனைகளுக்கு உறுதுணையாக உள்ளனர் இவவாறு அவர் கூறினார் மாணவர் எஸ் முஹம்மது ஃபஹீம்மின் சாதனைகள் 5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார். 

உலக நாடுகளின் கொடியை அடையாளம் கண்டு அந்த நாடுகளின் பெயரையும் தலைநகரையும் சொல்கிறார். ஒரே சமயத்தில் உலக நாடுகளின் அந்ததந்த நாடுகளில் கடிகார‌ நேரத்தை துல்லியமாக தெரிவிக்கிறார். நிறுவனங்கள் அறிமுகபடுத்தும் அனைத்து செல்போன் பெயரையும் , தயாரிப்பு தேதியையும் விவரிக்கிறார். 

எங்கெல்லாம் சென்றாரோ அதன் தேதியையும் நேரத்தையும் ஞாபத்தில் வைத்துள்ளார் பல்வேறு மொழிகளையும் கற்று வருகிறார். இவருடன் பழகும் மாணவர்கள்,நண்பர்கள்,ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட அனைவரின் பிறந்த நாளையும் ஞாபகத்தில் வைத்துள்ளார். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-