அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மகனைக் கொன்ற மனிதரை "திருக்குரானை மனனம் செய்ய வேண்டும்" என்ற நிபந்தனையில் மன்னித்த மாமனிதர்! (சவூதி அரேபியா)

------------------------

ஒரே தெருவில் வசித்து வந்த இரு வாலிபர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து விட்டார்.

விசாரித்த நீதிமன்றம் கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து விட்டது.

இஸ்லாமிய சட்டத்தின் படி, கொலைக்கு கொலை என்றாலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மன்னிக்கும் உரிமையையும் கொடுத்துள்ளது.

பொதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடாக பெரும் தொகையை எதிர்பார்ப்பது வழக்கம். கொலை செய்யப்பட்டவரின் தந்தை, "கொலையாளி முழு குரானையும் மனனம் செய்ய வேண்டும்" என்ற நிபந்தனையின் அடைப்படையில் மன்னித்தது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

நன்றி: முஸ்லிம் சமூக பேரவை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-