அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் சோலார் தொழிற்நுட்பப் பயிற்சி தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் (17, 18-12-2016- சனி மற்றும் ஞாயிறு) நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வியாபார மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி ஹோட்டலில் சோலாா் தொழில்நுட்ப இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. 

இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் வி.களத்தூர் கமால் பாஷா பயிற்சியின் அவசியம் மற்றும் சோலார் தொழில்நுட்பம், இந்தியாவின் வளர்ச்சிக்கு சோலார் தொழில்நுட்பம் அளிக்கும் பங்களிப்பு குறித்தும் விவரித்து பேசினார். 

டிரான்ஸ்பார்ம் நிறுவன மேலாண்மை இயக்குநரும் மனித வள மேம்பாட்டு வல்லுநருமான டாக்டர் ஜாபர் அலி பேசும்போது, தொழில் முனைவோர்கள் எவ்வாறு மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

சோலார் தொழில்நுட்பம் குறித்து இரண்டுநாள் பயிற்சியை சோலார் தொழில்நுட்ப வல்லுநர் முத்துகுமார் நடத்தினார்.
விளக்க உரை மற்றும் செய்முறை பயிற்சி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள் நிறைவின் போது மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மற்றும் சிறு வியாபார மேம்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சேகர் பார்வையிட்டாா்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-