அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பில் செவ்வாய் இரவு 8 மணி அளவில் பத்தாஹ் ஷிஃபா அல்-ஜசீரா அரங்கத்தில் 'மதச்சார்பின்மையே இந்தியாவின் உயிர்' என்கிற தலைப்பில் பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தை இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரத்தின் தமிழ் பிரிவு செயற்குழு உறுப்பினர் முஹமது ராஃபி வரவேற்புரை நிகழ்த்தி துவங்கி வைத்தார்.

இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரத்தின் தமிழ் பிரிவு தலைவர் முத்து அகமது தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபாரத்தின் ரியாத் மண்டல தலைவர் முகமது இல்யாஸ்இ இந்தியன் சோஷியல் ஃபாரத்தின் தமிழ் பிரிவு தலைவர் சர்தார் மற்றும் ரியாத் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் பொறியாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது இந்திய இறையான்மையின் தகர்ப்பு என்கிற தலைப்பில் இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரத்தின் மாவட்ட பேச்சாளர் அபுதாஹிர் சிறப்புரை நிகழ்த்தினார். பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை எடுத்துக்கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை நம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.  

இந்திய முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் விசயத்தில் கடந்த 24 வருடங்காளாக பொறுமையை கடைபிடித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், முஸ்லிம்கள் இந்திய சட்டத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றை எடுத்துக்கூறியதோடு இனி வரும்காலங்களில் முஸ்லிம் சமூகம் இதனை எப்படி கையாளவேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.

இக்கருத்தரங்கம் இந்தியா ஃபிரடர்னிடி ஃபாரம் தமிழ் பிரிவு செயலாளர் ரமுஜுதீன்  அவர்களின் நன்றியுரையோடு இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்ருதீன் தொகுத்து வழங்கினார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை இக்கருத்தரங்கத்தின் வாயிலாக இந்தியா ஃபிடர்னிடி ஃபாரம் தெரிவித்துக்கொள்கிறது. ரியாத் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-