அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


"அலப்போவில் அவப்போர்"
காதல் கவிதை எழுதுபவனே
கண்திறந்து பாரடா! சுருண்டு
கூதலில் தூங்குபவனே! 

இன்னும்நீ விழிக்கவில்லை ஏனடா?போதவில்லை பணமென்று
பொழுது பாராமல்உழைப்பவனே
சாகவில்லைஎன்று
சொல்லக்கூடசனமங்கு இல்லையடா!

இத்தனை உயிர்களைக் கொன்றும்இன்னுமா நாம் விழிக்கவில்லை?

அத்தனை பேரையழித்துமா அரசுகள்அசாதை இன்னும் அழிக்கவில்லை?

எத்தனை போர் வந்தும் இன்னும் இஸ்லாம் அழியவில்லை! அடமொத்த உலகே எதிர்த்து நின்றும் இம்மார்க்கம் எப்போதும் அழிவதில்லை!

யுத்தமா நடத்துவது? இல்லை
யுகம் முழுதும் வெறுமனே
சத்தமா போடுவது? போகட்டும் சாட்டுக்கு நாலொரு கவிதையெழுதிபக்கமாய்ப் போட்டுவிட்டால்போதுமென்று நினைப்பதுண்டு!

வெட்கமாய் இருக்கிறதே நம்
வேலையாகாத்தனம் கண்டு!
ஐ நாவை குறையிட்டால்
ஐக்கியம் மலர்ந்திடுமா?

அமெரிக்காவை முறையிட்டால்
அமைதிதான் புலர்ந்திடுமா?
சிரியாவும் ஷீஆவும்தான்
சீரழிவுக்கு காரணமென்றால்
சரியாய்ப் போய்விடுமா?
  சமாதானம் வளர்ந்திடுமா?

அரசியலையும் ஆட்சியையும்
அனுதினமும் நம்பிடாது
அரசனுக்கெல்லாம் அரசனான
ஆண்டவனை நம்பிடுவோம்!

ஒற்றுமை நம்மில் வேண்டும்
ஓரணியில் திரண்டிட வேண்டும்
வேற்றுமைகளைந்திடவேண்டும்
வேறுபாடுகள்ஒழிந்திட
வேண்டும்

சற்று நில்லெனத் தலைவன்
சத்தமிட்டால் சமூகமே
சட்டென்று நின்றிடவேண்டும் அந்தச்சட்டங்கள் இங்குவேண்டும்!
தொழுகையில் முறையிடுவோம்
தொடர்ந்து நோன்பிடுவோம்-துஆ,
அழுகையில் இறைஞ்சிடுவோம்
அதிகமாய் திக்ரிடுவோம்!

விழுகையில்தான் வெற்றியுண்டு என்று
விண்ணவன் சொல்லிடும்போது நம்எழுகையும் தூரத்திலில்லை 
என்றே நாம் எழுந்திடுவோம்!
மறுமையில் பதிலுண்டு
மாண்டவர்க்கும் வாழ்வுண்டு
பொறுமையிலும் தொழுகையிலும்பொழுதெல்லாம் இருந்தவர்க்குபெருமையுண்டு பேரிறைவனின்பெரும் சுவனமுண்டு! 

இந்தச் சிறுமைச் சிரியச் சர்வாதிகாரத்துகுசீரழியும் நரகம் தவிர என்னதானுண்டு?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-