அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னையில் 1,500 கோடி ரூபாய் செலவில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என, விமான போக்குவரத்து துறை டெல்லி செயலர் சௌபே தெரிவித்துள்ளார்

கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம், கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விமான போக்குவரத்து துறை செயலர் சௌபே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சௌபே, ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிந்துரைகளை பிரதமர் அலுவகலத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

சென்னை விமான நிலையத்தில், 10 ஆண்டுகளுக்குப்பின் விமானங்களை இறக்குவதில் இடநெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகும் என்றார். இதனை கருத்தில் கொண்டு, 2-வது விமான நிலையம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலையம் ஏற்படுத்தப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-