அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமெரிக்காவில் முஸ்லீம் கல்லூரி மாணவி ஒருவர் 3 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yasmin Seweid (18) என்பவர் நியூயார்க்கில் உள்ள ஒரு முஸ்லீம் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2ம் திகதியில் இருந்து அவர் கல்லூரிக்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவரது தந்தை பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன யாஸ்மினை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் யாஸ்மின் அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த 1ம் திகதி யாஸ்மின் பேஷன் ஷோவில் கலந்து கொண்டுவிட்டு நியூயார்க்கில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 3 நபர்கள் மது குடித்துவிட்டு யாஸ்மினிடம் தகராறு செய்துள்ளனர். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்திய அவர்கள் பின்னர் யாஸ்மினை தாக்க தொடங்கியுள்ளனர்.

நீ தீவிரவாதி தானே.. உடனே எங்கள் நாட்டை விட்டு உடனே வெளியேறு என்று தாக்க தொடங்கியதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார். அவர்கள் அடிக்கடி ட்ரம்ப்பின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர்கள் தன்னுடைய கைப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என பார்க்க முயன்றதாகவும், தலையில் அணிந்திருந்த முக்காடை அவிழ்க்க முயன்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இது தொடர்பாக யாஸ்மின் எழுதியுள்ள பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-