அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 வி.களத்தூரில் மொத்தம் 4  A.T.M. கள் உள்ளன. அவை பிரதமர் மோடி  500,1000 செல்லது என அறிவித்த நவ 08 முதல் இன்று வரை திறக்க வில்லை. 35 நாட்களாக பூட்டியே உள்ளது.இதனால் நமதூர் வங்கியில் இன்னமும் தினசரி கூட்டம் அலை மோதுகிறது.


பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம்-களால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நவ.8-ல் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை அடுத்து,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளைகளில்,பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூ. 2 ஆயிரம் அல்லது இதர நோட்டுகளைப் பெறும் பணியில் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 76 ஏ.டி.எம் மையங்களில் ஸ்டேட் வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்ன பிற வங்கிகளின் ஏ.டி.எம்-கள் நவ.9 முதல் திறக்கப்படவில்லை.
இதனால், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் எதிரே காலை 7 மணி முதல் இரவு முழுவதும் பணம் எடுக்க, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் படும்பாடு சொல்லிமாளாது எனத் தெரிகிறது.
புதிய ரூ. 500, ரூ.100 நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்தில் இல்லாதது, புதிய ரூ. 2,000 நோட்டுக்கும் போதிய சில்லரை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தினசரி மார்க்கெட், சில்லரை வர்த்தக நிறுவனங்கள், உழவர் சந்தை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பெரும்பாலானவை வியாபாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தள்ளுவண்டி, பழக்கடை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து வங்கியாளர்கள் உரிய நடவடிக்கை உடனே எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-