அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்

விபத்தில் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.71¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்க பெரம்பலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தஞ்சையை சேர்ந்த சர்புதீன் (வயது 46). இவரது மனைவி முபாரக்பேகம். இவர்களது மகன் முகமதுஆசிப். குடும்பத்தினர் திருச்சி உறையூரில் வசித்து வருகின்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன் கடந்த 31.1.2014 அன்று நள்ளிரவு பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையத்தில் வாகன ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்தகாயம் அடைந்த சர்புதீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 1.2.2014 அன்று உயிரிழந்தார்.

நஷ்டஈடு

இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வேப்பந்தட்டை தாலுகா தழுதாழையை சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரை கைது செய்தனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த சர்புதீன் சார்பில் விபத்து நஷ்ட ஈடு கேட்டு அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மைநீதிபதி நஸீமாபானு விபத்தில் பலியான சர்புதீன் குடும்பத்தாருக்கு ரூ.71 லட்சத்து 89 ஆயிரத்து 102 நஷ்டஈடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-