அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான எதிஹாத் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவை சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை முழுமையாகத் தடை செய்துள்ளது. 

இதனால் வளைகுடா நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தடை.. 
செப்டம்பர் மாத துவக்கத்தில் வளைகுடா நாடுகளை மையமாக வைத்துச் செயல்படும் எதிஹாத் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய முன்னணி விமான நிறுவனங்கள், தனது விமானத்தில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை விதிக்க நிலையில் தற்போது விமானத்தில் இந்த மொபைல் போன்களைக் கொண்டு செல்ல கூடத் தடை விதித்துள்ளது. 

எதிஹாத் நிறுவனம் 
இதுகுறித்த அறிவிப்புகளை எதிஹாத் நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்திருந்தது. மேலும் விமான நிலையத்திலும், டிக்கெட் பதிவு செய்யும் சமயத்திலும் தங்களது பயணிகளுக்குக் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பயன்பாடு ரத்து குறித்து அறிவுறுத்தி வருகிறது.

சாம்சங் 
இந்நிலையில் சாம்சங் நிறுவனமும் சர்வதேச சந்தையில் தான் விற்பனை செய்த அனைத்து மொபைல் போன்களையும் திருப்பப்பெறத் திட்டமிட்டுள்ளது. 

சோதனை 
மேலும் விமானத்தில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பயன்பாட்டைத் தடுக்கப் பயணிகள் மற்றும் பேகேஜ்-ஐ முழுமையாகப் பிரத்தியேக முறையில் சோதனை செய்ய இரு நிறுவனங்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 

உத்தரவு 
அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் கேலக்ஸி நோட் 7 மோசமான நிலையைச் சந்தித்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் அக்டோபர் 11ஆம் தேதி தனது கேலக்ஸி நோட் 7 தயாரிப்பை முழுமையாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-