அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


விமான நிலையங்களில் பயணிகளின் கைப்பைகள் பரிசோதித்து பார்க்கப்பட்டு, பாதுகாப்பு முத்திரை இடப்படுவது வழக்கம். 

சில பயணிகள் மறந்துபோய், முத்திரை பெறாமல் சென்றால், அவர்களை முத்திரை பெற்று வருமாறு திருப்பி அனுப்பும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதனால், பயணிகளுக்கும், பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.

இதற்கு முடிவு கட்டும்வகையில், குறிப்பிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில், பயணிகள், தங்கள் கைப்பைகளுக்கு பாதுகாப்பு முத்திரை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர்கள் விமானத்தில் ஏறி விடலாம். டெல்லியில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுக்கும், முக்கிய விமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில், வருகிற 15-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. 

இது வெற்றிகரமாக செயல்பட்டால், மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-