அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



முகமது மெசிக் 56 மொழிகளைச் சரளமாகப் பேசவும் 14 மொழிகளைப் புரிந்துகொள்ளவும் கூடியவராக இருக்கிறார்! 

யுகோஸ்லாவாகியாவைச் சேர்ந்த முகமதுவுக்கு 5 வயதிலேயே மொழிகளை வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் வந்துவிட்டது.

 “ஐந்து வயதில் கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். எனக்கு அறிமுகம் இல்லாத மொழி பேசுபவர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். சுற்றுலாவின் இறுதி நாளில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது.

டிரைவர், மெக்கானிக் ஆகியோருடன் கிரேக்க மொழியில் நான் பேசியதைக் கண்டு என் குடும்பமே அதிர்ந்து போனது. என் அப்பா அலுவலக ரீதியாகப் பல நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித் தேன். 

உறவினர்கள் பல நாடுகளில் இருந்ததால், அங்கும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அப்பா.

மருத்துவப் பரிசோதனையின் முடிவில், எனக்கு ஒருவகையான ஆட்டிசம் குறைபாடு கொஞ்சம் இருக்கிறது என்றும், அந்தக் குறைபாடு சில நேரங்களில் தற்செயலாக மொழிகளை எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது என்றும் தெரிய வந்தது. என்னுடைய திறமையை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் புதுப் புது மொழிகளைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர்.

சிலவற்றை நானே தேடிச் சென்று கற்றுக்கொண்டேன். இரண்டே வாரங்களில் யூ டியூப், 2 புத்தகங்கள், 43 கார்ட்டூன்கள் மூலம் பால்டிக் மொழியைக் கற்றுக்கொண்டேன். 

ஒரு சில மொழிகளைக் கற்றுக்கொண்டால், அவற்றுடன் கொஞ்சம் வித்தியாசப்படும் பல மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். 

வருடத்தில் 200 நாட்கள் விமானத்தில் பறந்துகொண்டே இருக் கிறேன். பல்வேறு நாடுகளில் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

56 மொழிகள் இன்று எனக்குத் தெரிந்தாலும் எல்லா மொழிகளையும் அடிக்கடி பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. 

ஒரு மொழி அழியும்போது மனிதன் ஒப்பற்ற செல்வத்தை இழக்கிறான்” என்கிறார் முகமது மெசிக்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-