அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மத்திய கிழக்கில் செல்வ வளம் கொழிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலையில் இருக்கின்றது, 2013ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஐக்கிய அரபு எமிரேட்சின் மொத்த சனத்தொகை 9.2 மில்லியன் மக்கள் இதில் 7.8 மில்லியன் மக்கள் வெளிநாட்டினர். பெரும்பாலும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

127,000 வருடங்களுக்கு முன்பே ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றது, ஆனால் நவீன ஐக்கிய அரபு எமிரேட்சின் தோற்றம் 1950ம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது, அதுவும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதன் பிற்பாடே அது வேகமான வளர்ச்சியை கண்டிருக்கின்றது.


1968ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எல்லாம் ஆங்கிலேயர்களே ஐக்கிய அரபு எமிரேட்சை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் ஐக்கிய அரபு எமிரேட்சின் பௌன்டர்கள் என வர்ணிக்கப்படும் ஷேக் சயித் பின் சுல்தான் அல் நஹ்யான், ஷேக் ரஷித் பின் சயீத் அல் மக்தூம் ஆகிய இருவரும் 1968ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அவர்களின் நாட்டை ஆள்வதற்கான உரிமையை ஆங்கிலேயர் அவர்களிடம் விட்டுக்கொடுத்திருந்தனர், (இவர்கள் இருவரினதும் மகன்மாரே தற்போது அபுதாபியினதும், டுபாயினதும் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள்).

ஏழு எமிரேட்ஸ்களாக இருந்த நாட்டை ஒன்றாக சேர்த்து ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சி செய்ய முடிவெடுத்து 1971 - 12 - 02ம் திகதி ஏழு எமிரேட்ஸ்களினதும் ஆட்சியாளர்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்திய போது ராஸ் அல் கைமா தவிர்ந்த ஏனைய ஆறு ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டு கூட்டாட்சியை ஏற்றுக்கொண்டனர், அந்த நாளைத்தான் நாட்டின் தேசிய தினமாக இன்றுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

இதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து 1972 - 02 - 10ம் திகதி ராஸ் அல் கைமா ஏழாவது எமிரேட்சாக வந்து இணைந்து கொண்டது.

கடந்த 65 வருடங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல மைற்கற்களை தனது பயணப்பாதையில் பதித்து வந்துள்ளது அவை வரலாற்று நிகழ்வுகளாக இன்னும் பல நூற்றாண்டு காலம் நிலைத்திருக்கும்.

1950 - அபுதாபியில் முதன் முதலாக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வருடமே எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது, இதன் பின்னரே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துரித வளர்ச்சி கண்டது எனலாம்.

1952 - நாட்டின் ஏழு எமிரேட்ஸ்கள் உருவானது.

1962 - முதன் முதலாக வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.

1964 - ஷேக் ரஷீத் சயீத் அல் மக்தூம் டுபாய் கிரீக்கை திறந்து வைத்தார்.

1966 - டுபாயில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது.

1967 - நாட்டின் முதலாவது சுரங்கப்பாதையான சிந்தகா சுரங்கப்பாதை கட்டப்பட்டது.

1971 - அரப் லீக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து கொண்டது.., ADNOC எனப்படும் அபுதாபி நெஷனல் ஒயில் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.., டுபாய் சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1972 - ரஷீத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது.., ரசீத் ஹொஸ்பிடல் திறந்து வைக்கப்பட்டது.

1973 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1975 - நாட்டின் முதலாவது தொழிற்சாலையான ராஸ் அல் கைமா சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.., ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1976 - அபுதாபி முதலீட்டு அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது.., எமிரேட்ஸ் டெலி கொம்யூனிகேஷனான எதிசலாத் நிறுவப்பட்டது.., ஷார்ஜா துறைமுக அதிகார சபை நிறுவப்பட்டது.., ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்டது.

1979 - நாட்டின் முதலாவது தொலைக்காட்சி சேவையான சனல் 33 TV அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது.., டுபாய் அலுமினிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

1981 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையில் கல்ப் கோப்ரேஷன் கௌன்சில் நிறுவப்பட்டது.

1982 - அபுதாபி சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்டது.

1983 - டுபாய் ஹொஸ்பிடல் திறந்து வைக்கப்பட்டது.., எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் ஆரம்பிக்கப்பட்டது.

1984 - சர்வேதேச பெற்றோலிய முதலீட்டு சபை ஆரம்பிக்கப்பட்டது.., ஜபல் அலி துறைமுக அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது.., எமிரேட்ஸ் எயார் லைன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

1987 - புஜைரா துறைமுக அதிகார சபை நிறுவப்பட்டது.., புஜைரா சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1988 - அஜ்மான், உம் அல் குவைன், துறைமுக அதிகார சபைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1989 - டுபாய் எயார் சோவ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1990 - தேசிய இரத்த வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1991 - ஷார்ஜா அல் ஹாசிமி ஹொஸ்பிடல் ஆரம்பிக்கப்பட்டது.., எமிரேட்ஸ் விமான பயிற்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1992 - டுபாய் எலக்ரிசிட்டி, வோட்டர், (DEWA) ஒதோரிடி ஆரம்பிக்கப்பட்டது.

1994 - அல் ஐன் சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1996 - ஷார்ஜா, ராஸ் அல் கைமா துறைமுக அதிகார சபைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1998 - அபுதாபி எலக்ரிசிட்டி, வோட்டர், (ADEWA) ஒதோரிடி ஆரம்பிக்கப்பட்டது.

1999 - புர்ஜ் அல் அரப் திறந்து வைக்கப்பட்டது.., அஜ்மான் துறைமுகம் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

2000 - டுபாய் பங்குச்சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2001 - நாட்டின் முதலாவது சட்டலைட்டான துரையா1 ஏவப்பட்டது.

2002 - வெளிநாட்டவர்களுக்காக ப்ரீ ஹோல்ட் ப்ரோபார்டி மார்கட் திறந்து வைக்கப்பட்டது.

2003 - டெலி கொமியூனிகேஷன் ரெகுலட்ரி ஒதோரிடி ஆரம்பிக்கப்பட்டது.., எதிஹாத் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.., எயார் அரேபியா விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2004 - டுபாய் இன்டர் நேஷனல் பைனான்சியல் செண்டர் ஆரம்பிக்கப்பட்டது.

2005 - நீர் முகாமைத்துவ, சுற்றுச்சூழல் அமைச்சு ஆரம்பிக்கப்பட்டது.., பெடரல் நெஷனல் கௌன்சிலில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களில் அரைவாசிப்பேர் வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள் என ஷேக் கலீபா அறிவித்தார்.

2006 - பெடரல் கௌன்சிலுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக முதலாவது வாக்களிப்பு இடம்பெற்றது.., டுபாய் நொலேட்ஜ் என்ட் ஹியூமன் டெவலப்மென்ட் ஒதோரிடி நிறுவப்பட்டது.., இரண்டாவது டெலிகொம்யூனிகேஷன் நிறுவனமான ''DU'' ஆரம்பிக்கப்பட்டது.., ராக் எயார்வேய்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

2007 - 2030ம் ஆண்டை எதிர்கொள்ள அபுதாபி எக்கொனமிக் விஷன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.., பாம் ஜுமைரா உருவாக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் வசிக்க விடப்பட்டனர்.

2008 - எரிசக்தி மாநாடு அபுதாபியில் கூட்டப்பட்டது.., நூர் டுபாய் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

2009 - டுபாய் மெட்ரோ ஆரம்பிக்கப்பட்டது.., கலீபா பிரிட்ஜ், யாஸ் மெரீனா செர்கியூட் ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

2010 - புர்ஜ் கலீபா திறந்து வைக்கப்பட்டது.., ஜபல் அலி அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.., பெராரி வேர்ல்ட் திறந்து வைக்கப்பட்டது.

2011 - யாசார் செயற்கை கோளின் பரீட்சார்த்த பணிகள் பூர்த்தியாக்கப்பட்டது.

2012 - ஷேக் சயீத் சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்டது.., கலீபா போர்ட் திறந்து வைக்கப்பட்டது.., குருஸ் டெர்மினல் திறந்து வைக்கப்பட்டது.

2013 - எக்ஸ்போ 2020 வர்த்தக கண்காட்சியை நடத்தும் வாய்ப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுக்கொண்டது.., ஷம்ஸ்1 சோலார் எனர்ஜி பிளான்ட் ஷேக் கலீபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2014 - டுபாய் ட்ரம் சேவை ஷேக் ஹம்தான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.., யூ ஏ ஈ கவர்மென்ட் யூ டியூப் சனல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2015 - முதலாவது விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது ''நம்பிக்கை'' என பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கலம் 2020ல் விண்ணுக்கு ஏவப்படும், விண்ணுக்கு விண்கலத்தை செலுத்தும் முதலாவது அரபு நாடு என்கின்ற வரலாற்று சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படைக்கும்.

2016 - டுபாய் லிகோ லேண்ட், டுபாய் வோட்டர் பார்க், டுபாய் ஹொலிவூட் தீம் பார்க் என்பன திறந்து வைக்கப்பட்டன.

இன்னும் பல்வேறு வரலாற்று தடங்களை இந்நாடு பதித்துச்செல்ல அதன் உப்பை தின்று வளர்கின்றவர்கள் என்கின்ற ரீதியில் நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-