அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச-01அபுதாபி, துபை மற்றும் ஷார்ஜாவில் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலம் விடப்பட்டு பல மில்லியன் டாலர்கள் திரட்டப்படுவது கிட்டதட்ட ஒரு தொழிலாகிவிட்டது. கடந்த மாதம் துபையில் நடைபெற்ற ஏலத்தில் இந்தியர் ஒருவர் D5 என்ற நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதேபோல், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் 'அபுதாபி 1' என்ற எண்ணை 31 மில்லியனுக்கு 32 வயதுடைய இளைஞர் ஒருவர் ஏலமெடுத்தார் ஆனால் அவர் கொடுத்த செக் போதிய பணமில்லாமல் வங்கியிலிருந்து திரும்பியதால் 'செக் மோசடி' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளர்.

அந்த நம்பர் பிளேட்டை வாங்கியவர் மீண்டும் பிறரிடம் மறுவிற்பனை செய்வதாக இருந்தால் ஏலத்தொகையை முழமையாக அடைத்தால் மட்டுமே மறுவிற்பனை செய்ய முடியும் என்பது சட்டம்.

தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ள அந்த நபர், நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவுடன் விட்ட ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா? 'அமீரகத்தை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற உழைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் மதிப்பை உயர்த்தவே ஏலம் எடுத்தேன்' என்று பீலா அடித்துவிட்டு விட்டு இப்ப செமையா நாறிப்போனார்!

Source: 7 Days

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-