அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராம ஹிந்து, முஸ்லீம், கிறித்துவ மதங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மும்மதத்தினரும் ஒன்று திரண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பின் முறையே , முஸ்லீம்கள் தொழுதும், கிறித்துவர்கள், பிரார்த்தனை செய்தும், இந்துக்கள் அழுதும், ஒப்பாரிகள் வைத்தும், வைதீக முறைப்படி பல சடங்குகளையும் செய்தனர்.

அவ்வூர் மக்கள் ஒன்று திரண்டு மவுன ஊர்வலம் சென்றனர். இதில், ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி கனகராஜ் உள்பட முன்னாள் இரு இராணுவ வீரர்களும் சீருடை அணிந்து கலந்து கொண்டு சென்றனர. அன்னமங்கலம் கிராம மக்கள் தன் வீட்டில் ஒருவர் இறந்தது போன்று நினைத்து துக்கம் அனுசரித்ன வருகின்றனர். அதனால் அன்னமங்கலம் கிராமமே இன்று சோகத்தில் மூழ்கி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-