அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபி, டிச-01அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 01.12.2016 முதல் 04.12.2016 வரை 3 விடுமுறை நாட்களிலும் சாலையோர பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தடை செய்யப்பட்ட பகுதிகளிலோ அல்லது பிற வாகனங்களுக்கு இடைஞ்சல் தரும் வகையிலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் குடியிருப்புவாசிகளுக்கு என இரவு 9 மணிமுதல் காலை 8 மணிவரை ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங்களிலும் யாரும் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணங்களை மீண்டும் 04.12.2016 ஞாயிறு காலை 8 மணிமுதல் செலுத்த வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர் சேவை மையங்கள் வழமைபோல் 04.12.2016 காலை முதல் இயங்கும்.

Source: Emirates 247

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-