அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-18 துபாய் மாநகரில் வருடந்தோறும் நடைபெறும் ஷாப்பிங் பெஸ்டிவல் எனப்படும் சர்வதேச ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் 2016 டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கி 2017 ஜனவரி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் துபையின் பிரசித்திபெற்ற பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கலந்து கொள்ளும்.

பன்னாட்டு மக்களும் வந்து குவியும் இந்த 34 நாட்கள் ஷாப்பிங் பெஸ்டிவல் காலத்தில் மின் சாதனங்கள், துணி மற்றும் ஆடை வகைகள், கடிகாரங்கள், நறுமணப் பொருட்கள், பர்னிச்சர் வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவகையான பொருட்களும் சுமார் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுவதுடன் தங்க நகை வாங்குபவர்களுக்கு 34 நாட்களும் தினம் ஒரு கிலோ தங்கம் மற்றும் உயர்ரக கார்களும் பரிசுப் பொருட்களாக கிடைக்கும்.

இந்த ஷாப்பிங் பெஸ்டிவல் காலத்தில், கடைவீதிகளும் சாலைகளும் அலங்கரிக்கப்படுவதுடன் சிறார்களுக்கான விளையாட்டு மையங்களும் நகரின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். 

மேலும் குளோபல் வில்லேஜ் எனப்படும் கொண்டாட்ட மையமும் பொதுமக்களால் மொய்க்கப்பட்டிருக்கும். அதிலும் இந்திய பெவிலியன் என அழைக்கப்படும் பகுதி நமது நாட்டு காலச்சார நினைவுபடுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை தினந்தோறும் நடத்தும்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-