அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்: குவைத் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 24,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பிச் செல்லவோ அல்லது பணி விசா மாற்றத்திற்கோ அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தால் அபராதம், சிறைத்தண்டனை எதுவும் கிடையாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவுடன் உள்ள வலுவான இருதரப்பு உறவுகள் காரணமாக இந்த சலுகையை அளிப்பதாக உள்துறை அமைச்சக தலைவர் மேஜர் ஜெனரல் தலால் இப்ரஹிம் மராஃபி தெரிவித்துள்ளார். இந்தியப் பணியாளர்களிடம் நாங்கள் சலுகை காட்டியே நடந்து வருகிறோம். 

ஆனால் சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம், சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் குடியேற்றத்துறையை அணுகினால் அவர்கள் இந்தியா திரும்பிச் செல்ல உதவி செய்கிறோம். 

இந்தியாவுடனான எங்களது வலுவான உறவுகளை கருத்தில் கொண்டு இந்தச் சலுகைகளை அளிக்கிறோம்  என்றார். 

இந்நிலையில் மேஜர் ஜெனரல் மராஃபி கூறும்போது, சட்ட விரோதமாக நீண்ட நாட்கள் தங்கி விடுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணியாளர்கள் தங்கள் ஸ்பான்சர்களை விடுத்து பணத்திற்காக பிற நிறுவனங்களுக்கு பணியாற்ற சென்று விடுகின்றனர். 

மேலும் சில சந்தர்ப்பங்களில் ஸ்பான்சர் அயல்நாடுகளில் இருக்கும் போது இவர்களது விசாக்காலம் முடிந்து விடுகிறது. இதனால் பயண ஆவணங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். 

சிலர் பணியாளர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பணியாளர்களே இவர்களை விட்டு பணத்திற்காக வேறு நிறுவனங்களை நாடுகின்றனர்.

 எங்களிடம் தெரிவித்தால் இவர்களுக்கு உதவ அரசு தயாராகவே உள்ளது. 

குடியேற்றத் துறை இவர்கள் தாய்நாடு திரும்பிச் செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும். இவர்களுக்கு சிறிய தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஆனால் அதுவும் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தவறான வழிகளில் செல்பவர்களை விட மாட்டோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-