அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியில் கவுன்சில் ஆப் இஞ்சினியரின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய சட்டப்படிசவுதியில் வேலை செய்யும் நபர்கள் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக நடந்த சோதனையில் 140 போலி சான்றிதழ் கண்டறியப்பட்டுள்ளன.இதில் 23 இந்தியர்கள் சான்றிதழ் போலி என்பது தெரிய வந்துள்ளதை அடுத்து இவர்களை சவுதி தொழில் அமைச்சகம் நேற்று நாடுகடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வேலை இழந்தவர்கள் புனே, சென்னை,பெங்களூர் மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களில் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படி போலி சான்றிதழ் வழங்கி வேலை செய்து வரும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதை தவிர சவுதிக்கு எந்த வேலைக்கு வருகிறார்களோ அதற்காக தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்றும் சவுதியில் கவுன்சில் ஆப் இஞ்சினியரின் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

பரிந்துரை செய்யபட்டது போல கிரிமினல் வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று சவுதி
இந்திய அமைப்பினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்க நேரிடும் என்பது உறுதியாகிவிட்டது.


Source:MediaOne

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-