அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-28
கடந்த இரு வருடங்களாக சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த வந்த கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தும் நோக்கில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு மொத்த உற்பத்தியிலிருந்து 1.8 மில்லியன் பேரல் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததை தொடர்ந்து மீண்டும் கச்சா எண்ணெய் விலையில் சற்றே ஏற்றம் காண துவங்கியுள்ளது.

அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் சில்லறை விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. 


அதனடிப்படையில் 2017 ஜனவரி மாத்திற்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 11 காசுகளும், டீசல் 13 காசுகளும் ஏற்றப்பட்டுள்ளன.

குறிப்பு: ஒப்பீட்டுக்காக அடைப்புக்குறிக்குள் 2016 டிசம்பர் மாத விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் 98 – 1.91 திர்ஹம் (1.80)
ஸ்பெஷல் 95 – 1.80 திர்ஹம் (1.69)
ஈ பிளஸ் - 1.73 திர்ஹம் (1.62)
டீசல் - 1.94 திர்ஹம் (1.81)

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-