அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியா அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று தலைநகரில் உள்ள அல்அலி யமாம் அரைமனையில் மன்னர் தலைமையில் கூடிய சிறப்பு கூட்டத்தில் 2017-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மன்னர் அறிவித்தார்.

வளைகுடா நாடுகள் உட்பட உலக நாடுகள் கடும் எண்ணெவிலை வீழ்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி சந்தித்து வரும் நிலையில் குடிமக்கள் வளர்ச்சிக்கு மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்தும் வழங்கி 2017-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு வடிவம் வழங்கப்பட்டுள்ளது என்று மன்னர் தனது உரையில் தெரிவித்தார்.

 பின்னர் அவர் அறிவிப்பை வெளியிட்டார்:
இதில் மொத்தமாக 692 பில்லியன் ரியால் வரவும், 890 பில்லியன் ரியால் செலவும் உள்ள கம்மி பட்ஜெட்டுக்கு வடிவம் வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். 

இந்த மொத்த தொகையானது பின்னரும் முறையில் பயன்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் விவரம் இதோ:

200 பில்லியன் ரியால் படிப்பு தொழில் பயிற்சி சம்பந்தமாக செலவும் ,191 பில்லியன் ரியால் ராணுவ செலவுக்கு,
120 பில்லியன் ரியால்  மருத்துவ துறைக்கும்,42 பில்லியன் ரியால் தேசத்தின் வளர்ச்சிக்கும், 48 பில்லியன் ரியால் தனியார் துறையின் வளர்ச்சிக்கும்,42 பில்லியன் ரியால் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிக்காகவும் மற்றும் 96 பில்லியன் ரியால் தொகுதிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த 
உள்ளதாக மன்னர் தெரிவித்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக  பேசப்பட்டது போல் வெளிநாட்டு தொழிலாளர்கள்(நாம்) பணம் தாயகம் அனுப்பும் பொது வரி செலுத்த வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பின்வரும் முறையால் பேரும் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது:

அதாவது வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு குழந்தைகள் உட்பட விசா 2017 முதல் புதிப்பித்தல் செய்யும் போது செலுத்தும் கட்டணத்தை விட 100 ரியால்கள் அதிகமாக வழங்க வேண்டியது இருக்கும். 

இந்த கட்டம் ஆனதுவருடத்திறுகு 100 ரியால் என்ற முறையில் அதிகரிக்கும்(அதாவது வருடத்திற்கு 100 ரியால் வீதம்). 

இன்னும் தெளிவாக என்றால் எ.கா தற்பொது விசா புதிப்பித்தல் செய்யும் போது 1000 ரியால் கட்ட வேண்டும் என்று வைத்து கொள்வோம் இது 2020 ஆகும் போது வருடத்திற்கு 100 ரியால் அதிகரித்து 1500 ரியால் ஆகும்.

இதேபோல் இந்த  2017 வருடம் தொழிலாளர்களுக்கு விசா புதிப்பித்தல் செய்யும் போது தற்போது உள்ள கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் விசா புதிப்பித்தல் செய்யும் போது செலுத்தும் கட்டணத்துடன் 300 ரியால் அதிகமாக செலுத்த வேண்டும்.

மேலும் குடும்பத்தினருக்கு செலுத்துவது போல் வருடத்திற்கு (மேல் குறிப்பிட்டது போல்) 100 ரியால் வீதம் தொழிலாளர்களும் செலுத்த வேண்டும். 

இதுவே வெளிநாட்டு  தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனியில் சவுதி தொழிலாளர்களை விட வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகமா இருந்தால் 300 ரியால்களுக்கு பதிலா 400 ரியால் செலுத்த வேண்டும்.

ஆனால் (காதீம் விசா) அதாவது வீட்டு தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பில் கட்டணம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to-Kuwait-தமிழ் பசங்க.
  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-