அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் ராமச்சந்திரன் (55). உணவகத் தொழிலாளி. அதிமுக தொண்டரான இவர், முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற தகவலறிந்து, திங்கள்கிழமை இரவு முதல் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா உயிரிழந்து விட்டார் என்ற செய்தியை கேட்ட ராமச்சந்திரன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அங்கு சென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொருவர் சாவு: பெரம்பலூர் 13-வது வார்டைச் சேர்ந்தவர் சடையன் மகன் சுப்ரமணியன் (50). அதிமுக தொண்டரான இவர், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தள்ளுவண்டியில் பட்சணங்கள் செய்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். பெரம்பலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-