அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அனைத்து வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை எளிதாக அறிந்துக்கொள்ள வசதியாக, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையமும் இணைந்து புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி வாக்காளர்கள் ’1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு, தங்களது செல்போன் மூலம் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால், ’வாக்காளரின் பெயர் மற்றும் முகவரி, வாக்காளர் பட்டியலின் பாகம் எண் ஆகிய விவரங்கள் எஸ்எம்எஸ்ஸில் வரும்.
இந்த வசதியினை அனைத்து வாக்காளர்கள் மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் தங்கள் அலைபேசி மூலம், ’1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விவரங்களை பெறும் பட்சத்தில் வாக்காளரின் கைபேசி எண்ணும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும்.
ஆதாரம் : தி இந்து

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-