அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியாவில் பிணவறைகளில் கேட்பாரின்றி 150 இந்தியர் உடல்கள் இருக்கு என்று நமது வலைத்தளத்தில் பதிவு இட்டு இருந்தோம் அதன் விளக்கம் தற்பொழுது மத்திய அரசு அளித்துள்ளது நமது பழைய செய்தி காண லிங்கை கிளிக் செய்யவும் 

http://www.vkalathur.in/2016/12/150.html

சவுதி அரேபியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று 150 இந்தியர்கள் உடல்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தள்ளது. 


வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். 

தற்போது அங்கு பணி குறைப்பு மற்றும் உள்ளுர் ஆட்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற நிபந்தனை உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர். 

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மார்ச்சுவரிகளில் 150 இந்தியர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால், இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது. 

இறந்தவர்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்வர்கள்தான்  அதிகம் என்றும் சொல்லப்பட்டது. 

ஆனால் இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறுகையில், ‘‘150 இந்தியர்கள் உடல்கள் சவுதி அரேபியாவில் உள்ளன என்ற செய்திகள் உண்மைக்கு மாறானவை. 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 10 பேர் உடல்கள் மட்டுமே அங்கு உள்ளன. 

சுமார் 20 லட்சம் பேர் வேலை பார்த்து வரும் வேளையில், தினமும் 3 முதல் 4 பேர் வரை இயற்கை மரணம், தற்கொலை, கொலை என்ற பல்வேறு  விதங்களில் உயிரிழக்க நேரிடுகிறது. 

இவர்களின் உடல்களை வழக்கமான அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்து இந்தியா கொண்டு வர குறைந்தது 3 வாரங்கள் ஆகும். 

தற்கொலை, கொலை, விபத்து போன்ற அசாதாரணமான மரணங்களின் போது உரிய விசாரணைக்கு பிறகே அந்த நடைமுறைகளை முடித்து கொண்டு வர முடியும். 

எனவே 10 பேர் உடல்கள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’’ என்றார்.

நன்றி-தினகரன்.காம் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-