அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குடந்தையில் 11ம் வகுப்பு பள்ளி மாணவன் அப்துல் மஜீத்
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
கொடூரமான இக்கொலையை #வன்மையாக_கண்டிக்கிறேன்


கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் சமூக விரோதிகளால் படுகொலை  செய்யப்பட்டு உடல்  ஆற்றில் வீசப்பட்டு கிடந்தது. உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?
காவல்துறையை உன்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்..!!
தமிழக அரசே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்...!

யா அல்லாஹ் என் சகோதரன் உயிரை பொருந்தி கொள்வாயாக..!!

கும்பகோணம் பைபாஸ் சாலை மாங்குடிஇரட்டை பிள்ளையார் கோவில் அருகில் காவிரி ஆறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் காவிரி ஆற்றில் 16 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

மாநிறம் உடைய அவர் கருப்பு கலர் பேண்டும், வெள்ளை நிற முழுக் கை சட்டையும் அணிந்து இருந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கும்பகோணம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் பிளஸ்- 1 மாணவர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் அப்துல் மஜித் (16) தாராசுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர்.

இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை 6-ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை டியூசனில் இருந்து அழைத்து வருவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை நிஜா மைதீன் நேற்று இரவு கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்து இருந்தார். இந்த நிலையில் தான் இன்று காலை அப்துல் மஜீத் காவிரி ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவர் அப்துல் மஜித் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அங்கு இல்லை. எனவே மாணவரை கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி விட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


கொலையாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது
வேதனை அளிக்கிறது எனவே காவல் துறை உடனடியாக
குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று
சமூகநீதி மக்கள் கட்சி மாநில தலைமை கேட்டுக்கொள்கிறது


கொளையாலியை கண்டுபுடிக்காமல் அலட்சியம் படுத்த காரணம் என்ன?

கொல்லபட்டவன் இஸ்லாமியன் என்பதனாலா..?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-