அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், டிச-22
துபையில் 2016 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை கடந்த 11 மாதங்களில் சுமார் 80,710 போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 28,180 குற்றங்கள் கண்காணிப்பு ரேடார் கேமராக்கள் மூலமும் எஞ்சியவை போலீஸ் மற்றும் பொதுமக்களின் புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்டவை.

அதிகபட்சமாக, கடந்த மே மாதம் 9,510 குற்றங்களும் குறைந்தபட்சமாக ஜனவரி மாதத்தில் 5,520 குற்றங்களும் பதிவாகியுள்ளன. முன்னாள் ராணுவத்தினர் பதியும் போக்குவரத்து புகார்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் 910 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக தெரிவிக்கும் புகார்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பின் பதியப்படுவதாகவும் துபை போக்குவரத்துத் துறையின் மேலாண் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் அல் மஜ்ரோஹி அவர்கள் தெரிவித்தார்கள்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-